நலம் எது என்று நாம் கேட்போம்?
நற்செய்தி மாலை: மாற்கு 11:29-33.
“இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, ‘ நானும், உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன்; நீங்கள் மறுமொழி கூறுங்கள். அப்போது எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என நான் உங்களுக்குச் சொல்வேன். திருமுழுக்கு அளிக்கும் அதிகாரம் யோவானுக்கு விண்ணகத்திலிருந்து வந்ததா? அல்லது மனிதரிடமிருந்து வந்ததா? எனக்குப் பதில் சொல்லுங்கள் ‘ என்றார். அவர்கள், ″ ‘ விண்ணகத்திலிருந்து வந்தது ‘ என்போமானால், ‘ பின் ஏன் அவரை நம்பவில்லை ‘ எனக் கேட்பார். எனவே ‘ மனிதரிடமிருந்து வந்தது ‘ என்போமா? ″ என்று தங்களிடையே பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால் மக்கள் அனைவரும் யோவானை ஓர் இறைவாக்கினராகக் கருதியதால் அவர்கள் அவர்களுக்கு அஞ்சினார்கள். எனவே, அவர்கள் இயேசுவிடம், ‘ எங்களுக்குத் தெரியாது ‘ என்று பதிலுரைத்தார்கள். இயேசுவும் அவர்களிடம், ‘ எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என்று நானும் உங்களுக்குச் கூறமாட்டேன் ‘என்றார்.”
நற்செய்தி மலர்:
ஏன், எதற்கு, எப்படி என்று,
எத்தனை கேள்வி நாம் கேட்டோம்?
வான் மைந்தன் நம்முன் இன்று,
வந்து கேட்டால் என் சொல்வோம்?
நான் என்னும் அகந்தை விட்டு,
நலமெது என்று நாம் கேட்போம்.
தேன் இனிமை வாக்கு தொட்டு,
தூயவர் திட்டம் தெரிந்திடுவோம்.
ஆமென்.
