நலமடைந்து நலப்படுத்து!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 22:31-32.
31 பின்னும் கர்த்தர்: சீமோனே, சீமோனே, இதோ, கோதுமையைச் சுளகினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக்கொண்டான்.
32 நானோ உன் விசுவாசம் ஒழிந்துபோகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்; நீ குணப்பட்டபின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து என்றார்.
கிறித்துவில் வாழ்வு:
இரு விழி இழந்தோர் தெரு வழி காட்டின்,
ஒரு விழியுடையோர் ஏற்பாரா?
திரு மொழி அறிவைக் கற்க விரும்பின்,
தெளிவில்லார்முன் நிற்பாரா?
பெரு வழி காட்டும் இறையின் முன்னில்,
பேசித் திரிவார் சேர்ப்பாரா?
கிருத்தவ வாழ்வைத் தம்மில் தொடங்கின்,
கிறித்துவினடியார் தோற்பாரா?
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.