துன்ப நாளைக் குறைப்பவரே!

துன்ப நாளைக் குறைப்பவரே!
நற்செய்தி மாலை: மாற்கு 13:17-20.
“அந்நாள்களில் கருவுற்றிருப்போர், பாலூட்டுவோர் ஆகியோர் நிலைமை அந்தோ பரிதாபம்! இவை குளிர்காலத்தில் நிகழாதபடி இறைவனிடம் வேண்டுங்கள். ஏனெனில் இவை துன்பம்தரும் நாள்களாய் இருக்கும். கடவுள் படைக்கத் தொடங்கிய காலத்திலிருந்து இந்நாள்வரை இத்தகைய வேதனை உண்டானதில்லை; இனிமேலும் உண்டாகப் போவதில்லை.ஆண்டவர் அந்நாள்களைக் குறைக்காவிடில் எவரும் தப்பிப் பிழைக்க முடியாது. ஆனால் தாம் தேர்ந்து கொண்டவர்களின் பொருட்டு அவர் அந்நாள்களைக் குறைத்திருக்கிறார் ″ .
நற்செய்தி மலர்:
துடிக்கும் அடியவர் துயரம் கண்டு,
துன்ப நாளைக் குறைப்பவரே,
குடிக்கும் கவலை குவளை உண்டு;
கொடுத்தேன் அதையும் குறைப்பீரே.
பிடிக்கும் உமது அன்பு கொண்டு,
பேதையரையும் நிறைப்பவரே,
முடிக்கும்படியாய்த் தந்த தொண்டு,
முழுமையாக நிறைப்பீரே!
ஆமென்.

No automatic alt text available.
LikeShow More Reactions

Comment

Leave a Reply