திருமறையுண்டு!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 16: 29-31.
29 ஆபிரகாம் அவனை நோக்கி: அவர்களுக்கு மோசேயும் தீர்க்கதரிசிகளும் உண்டு, அவர்களுக்கு அவர்கள் செவிகொடுக்கட்டும் என்றான்.
30 அதற்கு அவன்: அப்படியல்ல, தகப்பனாகிய ஆபிரகாமே, மரித்தோரிலிருந்து ஒருவன் அவர்களிடத்திற்குப் போனால் மனந்திரும்புவார்கள் என்றான்.
31 அதற்கு அவன்: அவர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்து ஒருவன் எழுந்துபோனாலும், நம்பமாட்டார்கள் என்று சொன்னான் என்றார்.
கிறித்துவில் வாழ்வு:
கையில் திருமறை நூலுண்டு.
கருத்தோ எதிர்மறை வேறுண்டு.
பையில் நிறையப் பொருளுண்டு.
பகிரும் அன்பு எங்குண்டு?
மையில் கருமை நிறமுண்டு.
மனமும் அதுபோல் தானுண்டு.
செய்யுள் வழியும் கேட்பதுண்டு.
செயல்படுவோர்கள் எங்குண்டு?
ஆமென்.