திருப்பும் ஆண்டவரே!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 1 :16 -17
16 அவன் இஸ்ரவேல் சந்ததியாரில் அநேகரை அவர்கள் தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திருப்புவான்.
17 பிதாக்களுடைய இருதயங்களைப் பிள்ளைகளிடத்திற்கும், கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்கும் திருப்பி, உத்தமமான ஜனத்தைக் கர்த்தருக்கு ஆயத்தப்படுத்தும்படியாக, அவன் எலியாவின் ஆவியும் பலமும் உடையவனாய் அவருக்கு முன்னே நடப்பான் என்றான்.
கிறித்துவில் வாழ்வு:
தெய்வத்தின் ஆவி திருத்தாவிட்டால்,
தெளிவற்றவர்கள் திருந்தார்கள்.
பொய்மையின் ஆவி பொய்க்காவிட்டால்,
புனிதருரைப்பினும் வருந்தார்கள்.
மெய்யெது, பொய்யெது அறியா மக்கள்;
மேன்மை எப்படி பெறுவார்கள்?
ஐயனின் மீட்பு அரிதென்றுணர்ந்தேன்;
ஆவியரால்தான் வருவார்கள்!
ஆமென்.