தாவீதின் இறைவாக்கு!
நற்செய்தி மாலை: மாற்கு 12:35-37.
“இயேசு கோவிலில் கற்பித்துக் கொண்டிருக்கும்போது, ‘ மெசியா தாவீதின் மகன் என்று மறைநூல் அறிஞர் கூறுவது எப்படி? தூய ஆவியின் தூண்டுதலால், ‘ ஆண்டவர் என் தலைவரிடம், ″ நான் உம் பகைவரை உமக்கு அடிபணியவைக்கும்வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும் ″ என்று உரைத்தார் ‘ எனத் தாவீதே கூறியுள்ளார் அல்லவா! தாவீது அவரைத் தலைவர் எனக் குறிப்பிடுவதால் அவர் அவருக்கு மகனாக இருப்பது எப்படி? ‘ என்று கேட்டார். அப்போது பெருந்திரளான மக்கள் இயேசு கூறியவற்றை மனமுவந்து கேட்டுக்கொண்டிருந்தார்கள்.”
நற்செய்தி மலர்:
தாவிதின் மகனாய்ப் பிறப்பவர் எனினும்,
தலைவர் என்றுதான் விளித்தார்.
தாழ்மையில்லா உலகம் எனினும்,
தந்தை அன்பில்தான் அளித்தார்.
பாவியர் மீட்பு அரிதே எனினும்,
பரிந்தவர் குருதிதான் தெளித்தார்.
பகுத்தறிவிற்குப் புரியாதெனினும்,
பணிந்தவர் யாவருந்தான் களித்தார்!
ஆமென்.