சொன்னார் குறை!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 11:53-54.
53இவைகளை அவர்களுக்கு அவர் சொல்லுகையில், வேதபாரகரும் பரிசேயரும் அவர்மேல் குற்றஞ்சாட்டும் பொருட்டு, அவர் வாய்மொழியில் ஏதாகிலும் பிழை கண்டுபிடிக்கவேண்டும் என்று உபாயம்பண்ணி அவரை மிகவும் நெருக்கவும், |
54அநேக காரியங்களைக்குறித்துப் பேசும்படிஅவரை ஏவவும் தொடங்கினார்கள். கிறித்துவில் வாழ்வு: தன்னால் கூடும் என்பவனும், தவறேன் என்று சொல்பவனும், முன்னாள் தன்குறை உணர்வதுதான், முதலில் கற்கும் இறையறிவாம். பன்னாள் இப்படி நாம் கேட்டும், பலவித முறையில் வழிபட்டும், சொன்னார் குறையே தேடுகிறோம் சொத்து நமக்கு குறையறிவாம்! ஆமென். |