சொந்த உறவாய்ச் சேர்ப்போம்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 5:29-32.
29 அந்த லேவி என்பவன் தன் வீட்டிலே அவருக்குப் பெரிய விருந்துபண்ணினான். அநேக ஆயக்காரரும் மற்றவர்களும் அவர்களோடேகூடப் பந்தியிருந்தார்கள்.
30 வேதபாரகரும் பரிசேயரும் அவருடைய சீஷருக்கு விரோதமாக முறுமுறுத்து: நீங்கள் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனபானம்பண்ணுகிறதென்னவென்று கேட்டார்கள்.
31 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை.
32 நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார்.
கிறித்துவில் வாழ்வு:
எந்தன் நேர்மை உயர்வென எண்ணி,
எளியரைப் பார்க்க வெறுத்திட்டேன்.
உந்தன் தூய்மை முன்னர் நிற்க,
ஒருவரும் இல்லை மறந்திட்டேன்.
மைந்தன் வந்து உரைத்ததினாலே,
மனிதத் தன்மை புரிந்திட்டேன்.
சொந்த உறவாய்ச் சேர்த்துக்கொண்டு,
செயலில் உம்மை அறிவிப்பேன்!
ஆமென்.