சிறந்த விழி, இறையின் மொழி!
நற்செய்தி மாலை: மாற்கு 9:47-48.
” நீங்கள் இரு கண்ணுடையவராய் நரகத்தில் தள்ளப்படுவதைவிட ஒற்றைக் கண்ணராய் இறையாட்சிக்கு உட்படுவது உங்களுக்கு நல்லது. நரகத்திலோ அவர்களைத் தின்னும் புழு சாகாது; நெருப்பும் அவியாது.”
நற்செய்தி மலர்:
இரு கண் கொண்டு பார்த்துத் தவறின்,
எந்தக் கண்ணைக் குறை சொல்வேன்?
ஒரு கண்ணோடு உம்மையடைய,
உதவும் கண்ணாய் எதைக் கொள்வேன்?
மறு கண் வேண்டி உம்மைப் பார்த்தேன்;
மன்னா, உம்மிடம் வழி கேட்டேன்.
சிறு பிழைகூடச் செய்யத் தடுக்கும்,
சிறந்த விழியாம் மொழி கேட்பேன்!
ஆமென்.