சாக்குப் போக்கு!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 14:18.
18 அவர்களெல்லாரும் போக்குச்சொல்லத் தொடங்கினார்கள். ஒருவன்: ஒரு வயலைக்கொண்டேன், நான் அகத்தியமாய்ப்போய், அதைப் பார்க்கவேண்டும், என்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.
கிறித்துவில் வாழ்வு:
வாங்கு முன்னர் பாராது
வயலை விலைக்குக் கொண்டாராம்;
தூங்குவதையும் கைவிட்டுத்
தோண்டச் செல்வேன் என்பாராம்.
தாங்குகின்ற அடித்தளமும்,
தவறும் பொய்யால் சாய்ந்திடுதே.
ஏங்கு முன்னர் வந்திடுவீர்;
இறையோன் மெய்யை ஆய்ந்திடவே!
ஆமென்.