குஞ்சினைக் காக்கும் கோழி!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 13:34-35.
34 எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின் கீழே கூட்டிச் சேர்த்துக் கொள்ளும் வண்ணமாக நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று.35 இதோ, உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும்; கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று நீங்கள் சொல்லுங்காலம் வருமளவும் என்னைக் காணாதிருப்பீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
கிறித்துவில் வாழ்வு:
குஞ்சினைக் காக்கும் கோழியைப் போன்று,
கிறித்து முயன்றார் அன்னாளில்.
வஞ்சக யூதரோ வாக்கினை வெறுத்து,
வாழ்வினை இழந்தார் பின்னாளில்.
கொஞ்சிடும் குழந்தை என்றே நினைத்து,
கோட்டையாய் காக்கிறார் நன்னாளில்.
மிஞ்சினால் மீண்டும் வருமே அழிவு;
மீள்வோர் பணிகிறார் இன்னாளில்!
ஆமென்.