கேட்டேன், கேட்டேன்!

கேட்டேன், கேட்டேன்!
  கிறித்துவின் வாக்கு: லூக்கா 12:16-19.

16அல்லாமலும், ஒரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: ஐசுவரியமுள்ள ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது.
17அப்பொழுது அவன்: நான் என்ன செய்வேன்? என் தானியங்களைச் சேர்த்து வைக்கிறதற்கு இடமில்லையே;
18நான் ஒன்று செய்வேன், என் களஞ்சியங்களை இடித்து, பெரிதாகக் கட்டி, எனக்கு விளைந்த தானியத்தையம் என் பொருள்களையும் அங்கே சேர்த்துவைத்து,
19பின்பு: ஆத்துமாவே, உனக்காக அநேக வருஷங்களுக்கு அநேகம் பொருள்கள் சேர்த்துவைக்கப்பட்டிருக்கிறது; நீ இளைப்பாறி, புசித்துக் குடித்து, பூரிப்பாயிரு என்று என் ஆத்துமாவோடே சொல்லுவேன் என்று தனக்குள்ளே சிந்தித்துச் சொல்லிக்கொண்டான்.

கிறித்துவில் வாழ்வு:
பத்தின் நாளில், நூறினைக் கேட்டேன்.
பல நூறானபின், ஆயிரம் கேட்டேன்.
சொத்தும் சேரவே, இலட்சம் கேட்டேன்.
சொந்தமாகவே, கோடிகள் கேட்டேன்.
வித்தை கற்றிட, காசுகள் கேட்டேன்;
வேலை கிடைக்கவே, திருப்பிக் கேட்டேன்.
நித்தமும் உம்மிடம் சொத்தே கேட்டேன்;
நேர்மை இல்லை, அதனால் கெட்டேன்!
ஆமென்.





Leave a Reply