கிறித்து எதிலும் குறை தரார்!கிறித்துவின் வாக்கு: லூக்கா 10:7-9.
7அந்த வீட்டிலேதானே நீங்கள் தங்கியிருந்து, அவர்கள் கொடுக்கிறவைகளைப் புசித்துக் குடியுங்கள்; வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான். வீட்டுக்கு வீடு போகாதிருங்கள். |
8ஒரு பட்டணத்தில் நீங்கள் பிரவேசிக்கிறபொழுது, ஜனங்கள் உங்களை ஏற்றுக்கொண்டால் அவர்கள் உங்கள்முன் வைக்கிறவைகளை நீங்கள் புசித்து, |
9அவ்விடத்திலுள்ள பிணியாளிகளைச் சொஸ்தமாக்கி: தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குச் சமீபமாய் வந்திருக்கிறது என்று அவர்களுக்குச் சொல்லுங்கள். கிறித்துவில் வாழ்வு: கஞ்சியோ கூழோ, கறியோ, குழம்போ, கடவுளின் ஊழியர் போதுமென்பார். மிஞ்சிப் போவார் மேலும் கேட்பார்; மெய்யறிவின்றித் தீது செய்வார். நெஞ்சின் ஆவல் நேர்மையாயின், நிம்மதியோடு இறை தருவார். கொஞ்சமும் ஐயம் நமக்கு வேண்டாம்; கிறித்து எதிலும் குறைதரார்! ஆமென். |