குறைகூறும் கூட்டம்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா: 7:31-32.
31 பின்னும் கர்த்தர் சொன்னது: இந்தச் சந்ததியை யாருக்கு ஒப்பிடுவேன்? இவர்கள் யாருக்கு ஒப்பாயிருக்கிறார்கள்?
32 சந்தை வெளியில் உட்கார்ந்து, ஒருவரையொருவர் பார்த்து: உங்களுக்காகக் குழல் ஊதினோம், நீங்கள் கூத்தாடவில்லை; உங்களுக்காகப் புலம்பினோம், நீங்கள் அழவில்லை என்று குறை சொல்லுகிற பிள்ளைகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்.
கிறித்துவில் வாழ்வு:
குனிவது குற்றம், நிமிர்வது குற்றம்,
குறைதான் கூறும் நம் சுற்றம்.
இனிமை பெற்றும், ஏற்றம் உற்றும்,
எண்ணம் கெட்டால் பிதற்றும்.
தனியாய் அமர்ந்து, தம்குறை உணர்ந்து,
தம்மைத் திருத்துவதே மாற்றம்.
பணிவாய் நடந்து, பண்புகள் புகழ்ந்து,
பாராட்டார்க்கு ஏமாற்றம்!
ஆமென்.