குருசைப் பரிசாய்த் தந்திடுவார்!
நற்செய்தி மாலை: மாற்கு 15:9-13.
“அதற்குப் பிலாத்து, ‘ யூதரின் அரசரை உங்களுக்காக நான் விடுதலை செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களா? ‘ என்று கேட்டான். ஏனெனில் தலைமைக் குருக்கள் பொறாமையால்தான் அவரை ஒப்புவித்திருந்தார்கள் என்று அவன் உணர்ந்திருந்தான். ஆனால் தலைமைக் குருக்கள் தங்களுக்குப் பரபாவையே அவன் விடுதலை செய்ய வேண்டுமெனக் கேட்குமாறு கூட்டத்தினரைத் தூண்டிவிட்டார்கள். பிலாத்து மீண்டும் அவர்களைப் பார்த்து, ‘ அப்படியானால் நீங்கள் யூதரின் அரசர் என்று குறிப்பிடும் இவனை நான் என்ன செய்ய வேண்டும்? ‘ என்று கேட்டான். அவர்கள், ‘ அவனைச் சிலுவையில் அறையும் ‘ என்று மீண்டும் கத்தினார்கள்.”
நற்செய்தி மலர்:
வெறி நிறைந்த மக்கள் பெருக,
வீணர் பதவிக்கு வந்திடுவார்.
நெறி இழந்த தலைவர் ஆள,
நேர்மையாளர் நொந்திடுவார்.
குறி மறந்த கூட்டம் உயர,
குருசைப் பரிசாய்த் தந்திடுவார்.
பொறி விழுந்த புழு போலான,
புனிதரை இறைவன் ஏந்திடுவார்!
ஆமென்.