காட்டுப் பூக்களின் அழகு!

காட்டுப் பூக்களின் அழகு!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 12:27-28.

27காட்டுப்புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப்பாருங்கள்; அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை, என்றாலும் சாலொமோன் முதலாய்த் தன் சர்வ மகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

28இப்படியிருக்க, அற்பவிசுவாசிகளே, இன்றைக்குக் காட்டிலிருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படுகிற புல்லுக்குத் தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா?
கிறித்துவில் வாழ்வு:

காட்டு மலர்கள் மலரும் காட்சி,

காணக் கிடைக்கா நல்லின்பம்.

கேட்டு நீவிர் எழுத முயன்றால்,

கிட்ட வராது சொல்லின்பம்.

போட்டி போட்ட அரசருடையே,

போதாதென்பது இறையெண்ணம்.

ஆட்டுவிக்கும் அவரே இன்பம்;

அதுதான் நமக்கு நிறைவெண்ணம்!

ஆமென்.

Leave a Reply