கவலை விடுவீர்!

கவலைப்படாதீர்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 12:22-23.

22பின்னும் அவர் தம்முடைய சீஷரை நோக்கி: இப்படியிருக்கிறபடியினால், என்னத்தை உண்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும், என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
23ஆகாரத்தைப்பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகளாயிருக்கிறது.

கிறித்துவில் வாழ்வு:
உயிரைக் கொடுத்தவர் உணவு கொடாரா?
உடலைக் கொடுத்தபின் உடை மூடாரா?
பயிரைக் கொடுத்தவர் நீரை விடாரா?
பரிசாய்க் கொடுத்து நிறைத்திடாரா?

வயிறை நிரப்பும் கவலை விடாரே,
வருந்தல் நிறுத்தும், வலி கொடாரே!
மயிர்கள் எண்ணித் தரையில் இடாரே,
மன்னித்தும்மைக் காத்திட்டாரே!
ஆமென்.

Leave a Reply