கல்லாய்ப் போன நெஞ்சுள்ளார்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 19:39-40.
39 அப்பொழுது கூட்டத்திலிருந்த பரிசேயரில் சிலர் அவரை நோக்கி: போதகரே, உம்முடைய சீஷரை அதட்டும் என்றார்கள்.
40 அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: இவர்கள் பேசாமலிருந்தால் கல்லுகளே கூப்பிடும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
கிறித்துவில் வாழ்வு:
கல்லாய்ப் போன நெஞ்சுள்ளார்,
கடவுள் பெயரால் வருகின்றார்.
சொல்லால் வடித்த பொய்களுடன்,
செயலில் தீங்கும் தருகின்றார்.
இல்லார் பற்றில் உயர்ந்துள்ளார்;
இதனால் இயேசுவை அடுக்கின்றார்.
பொல்லார் தடுக்க முயன்றாலும்,
புனிதர் நற்பதில் கொடுக்கின்றார்!
ஆமென்.