கற்றோர் அறிஞர் இருக்கையிலே!
இறைவாக்கு: லூக்கா 1:8-9.
8 அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள்.
9 அவ்வேளையில் கர்த்தருடைய தூதன் அவர்களிடத்தில் வந்து நின்றான், கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது; அவர்கள் மிகவும் பயந்தார்கள்.
இறைவாழ்வு:
கற்றோர் அறிஞர் இருக்கையிலே,
கல்லா மேய்ப்பருக்கேன் உரைத்தார்?
மற்றோர் அறியச் சொல்பவர்க்கே,
மகிழ்ச்சியின் செய்தியை முதலுரைத்தார்?
பெற்றேன் மீட்பு என்பவரே,
பிறரின் மீட்பிற்குரைத்தீரா?
சற்றே நின்று நிலையுணர்ந்து,
சான்றாய் மகிழ்வைப் பகிர்வீரா?
ஆமென்.