கட்டிய கோயில்!
நற்செய்தி மாலை: மாற்கு13:1-2.
“இயேசு கோவிலைவிட்டு வெளியே வந்தபோது அவருடைய சீடருள் ஒருவர், ‘ போதகரே, எத்தகைய கற்கள்! எத்தகைய கட்டடங்கள்! பாரும் ‘ என்று அவரிடம் சொல்ல, இயேசு அவரை நோக்கி, ‘ இந்த மாபெரும் கட்டடங்களைப் பார்க்கிறீர் அல்லவா! இங்குக் கற்கள் ஒன்றின்மேல் ஒன்று இராதபடி எல்லாம் இடிக்கப்படும் ‘ என்றார்.”
நற்செய்தி மலர்:
சாலமன் எழுப்பிய கோயில் எங்கே?
சரியாய்ப் பார்த்து எழுதுவீர் இங்கே.
வேலைப் பணிகளின் சிறப்பு எங்கே?
வேளை வந்தது, அழிந்தது அங்கே.
காலம் கழித்து கட்டியதெங்கே?
கல்மேல் கல்லும் காணாதங்கே.
ஞாலம் மீட்கும் இடந்தான் எங்கே?
நமது நெஞ்சக் கோயில் இங்கே!
ஆமென்.