ஐயம் தவிர்! ஆளுமை காண்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 20:1-2.
1 அந்நாட்களில் ஒன்றில், அவர் தேவாலயத்திலே ஜனங்களுக்கு உபதேசித்து, சுவிசேஷத்தைப் பிரசங்கித்தபோது, பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் மூப்பரும் அவரிடத்தில் கூடிவந்து:
2 நீர் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்? அதை எங்களுக்குச் சொல்லும் என்றார்கள்.
கிறித்துவில் வாழ்வு:
யார் கொடுத்தார் இவ்வாளுமையை?
எப்படி அடைந்தீர் இவ்வல்லமையை?
பார் படைத்தாரிடம் நாம் கேட்டோம்;
பற்றற்றதினால் பலர் கெட்டோம்.
நேர்பட விடையைக் கொடுப்பதற்கு,
நெஞ்சைக் கேட்டார் இறைமகனார்.
கார் இருள் ஐயம் கைவிட்டோம்.
கடவுளின் மாட்சி கண்டிட்டோம்!
ஆமென்.