ஏளனம்!

ஏளனம் செய்கிறார்!  
கிறித்துவின் வாக்கு:  லூக்கா 23: 35-37.  

35  ஜனங்கள் நின்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுடனேகூட அதிகாரிகளும் அவரை இகழ்ந்து: இவன் மற்றவர்களை இரட்சித்தான், இவன் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட கிறிஸ்துவானால், தன்னைத்தானே இரட்சித்துக் கொள்ளட்டும் என்றார்கள்.

36  போர்ச்சேவகரும் அவரிடத்தில் சேர்ந்து, அவருக்குக் காடியைக் கொடுத்து:

37  நீ யூதரின் ராஜாவானால், உன்னை இரட்சித்துக்கொள் என்று அவரைப் பரியாசம்பண்ணினார்கள்.  

கிறித்துவில் வாழ்வு:  

யாரிவர் இயேசு, என்றென அறியார், 

ஏளனம் செய்து இகழ்கின்றார்.   

வேரினை முறித்து விளைச்சல் கேட்பார்;

வீணாய் மண்ணை அகழ்கின்றார்.

ஊரினில் இவர்போல் பலபேர் உள்ளார்;  

உண்மை இழந்துத் திகழ்கின்றார்.  

பாரினை மீட்கும் பணியென அறிவார்,  

பணிந்து இறையைப் புகழ்கின்றார்.  

ஆமென்.  

-கெர்சோம் செல்லையா.  

Leave a Reply