ஏற்பவரும் எதிர்ப்பவரும்!

ஏற்பவரும் எதிர்ப்பவரும்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 19:47-48.

47  அவர் நாடோறும் தேவாலயத்தில் உபதேசம் பண்ணிக்கொண்டிருந்தார். பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் ஜனத்தின் மூப்பரும் அவரைக் கொலைசெய்ய வகைதேடியும்,

48  ஜனங்களெல்லாரும் அவருக்குச் செவிகொடுத்து அவரை அண்டிக்கொண்டிருந்தபடியால், அதை இன்னபடி செய்யலாமென்று வகைகாணாதிருந்தார்கள்.

கிறித்துவில் வாழ்வு:

ஏற்பவர், எதிர்ப்பவர் இருக்கும் நாட்டில்,

எப்படி இறைவாக்குரைக்கின்றீர்?

பார்ப்பவர் எவரையும் ஈர்க்கும் வகையில்,

பண்பில் எப்படிச் சிறக்கின்றீர்?

தோற்பவர் வெறியில் துன்பம் தரினும்,

துணிந்து எப்படிச் சொல்கின்றீர்?

ஆர்ப்பரிக்காதீர், அமைதி நாடும்;

ஆண்டவர் வழியில் செல்கின்றீர்!

ஆமென்.

Leave a Reply