ஏற்கின்ற அன்பு!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 15:21-24.21
குமாரன் தகப்பனை நோக்கி: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன், இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரன் அல்ல என்று சொன்னான்.22 அப்பொழுது தகப்பன் தன் ஊழியக்காரரை நோக்கி: நீங்கள் உயர்ந்த வஸ்திரத்தைக் கொண்டுவந்து, இவனுக்கு உடுத்தி, இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள்.23 கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் புசித்து, சந்தோஷமாயிருப்போம்.24 என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான். அப்படியே அவர்கள் சந்தோஷப்படத் தொடங்கினார்கள்.
கிறித்துவில் வாழ்வு:
இறந்தவன் எழுந்து வருவதுபோன்று,
இளையவன் வீட்டுள் வருகின்றான்.
பிறந்தநாள் மகிழ்வு தருவதுபோன்று,
பேரின்ப மகிழ்வும் தருகின்றான்.
சிறப்புடை, மோதிரம், செருப்பும் கொடுத்து,
சிறியனைத் தந்தை ஏற்கின்றான்.
மறக்கயியலா விருந்தும் படைத்து,
மன்னிப்பன்பில் சேர்க்கின்றான்.
ஆமென்.