எழுப்பும் ஏழைப் பிணியரை!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 4:38-39.
38 பின்பு அவர் ஜெபஆலயத்தை விட்டுப் புறப்பட்டு, சீமோன் வீட்டில் பிரவேசித்தார், சீமோனுடைய மாமி கடும் ஜுரமாய்க் கிடந்தாள். அவளுக்காக அவரை வேண்டிக்கொண்டார்கள்.
39 அவர் அவளிடத்தில் குனிந்துநின்று, ஜுரம் நீங்கும்படி கட்டளையிட்டார், அது அவளை விட்டு நீங்கிற்று; உடனே அவள் எழுந்திருந்து அவர்களுக்குப் பணிவிடை செய்தாள்.
கிறித்துவில் வாழ்வு:
எழும்ப இயலா ஏழைப் பிணியர்
எங்களில் உண்டு, இயேசையா.
தழும்பு கொண்ட கையால் தூக்கித்
தாங்கி நிறுத்தும், நேசையா.
விழுந்து போனவர் என்றிருந்தாலும்
வேண்டுகிறாரே, இயேசையா.
தொழுது மீண்டும் திருப்பணி செய்யத்
தூயோராக்கும், நேசையா!
ஆமென்.