எலியா போல் பேசுகின்ற இறைமக்கள்!
நற்செய்தி மாலை: மாற்கு 9:11-13.
“அவர்கள் அவரிடம், ‘ எலியாதான் முதலில் வரவேண்டும் என்று மறைநூல் அறிஞர் கூறுவதேன்? ‘ என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘ எலியா முதலில் வந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்தப் போகிறார் என்று கூறுவது உண்மையே. ஆனால் மானிட மகன் பல துன்பங்கள் படவும் இகழ்ந்து தள்ளப்படவும் வேண்டுமென்று அவரைக் குறித்து எழுதப்பட்டுள்ளதே, அது எப்படி? ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன்; எலியா வந்துவிட்டார். அவர்கள் தாங்கள் விரும்பியவாறெல்லாம் அவருக்குச் செய்தார்கள். அவரைக் குறித்து மறைநூலில் எழுதியுள்ளவாறே அவை நிகழ்ந்தன ‘ என்றார்.”
நற்செய்தி மலர்:
நலிந்தோரை நசுக்குகின்ற
நஞ்சான உலகிலே,
எலியா போல் பேசுகின்ற
இறைமக்கள் தாருமே.
மெலிந்தோரை மீட்டிடவே,
பலியான இயேசுவே,
வலிந்து அழைத்தோமே;
வாழ்விக்க வாருமே!
ஆமென்.