எப்படி வாழ்வோம்?
கிறித்துவின் வாக்கு: லூக்கா 5:4-7.
4 அவர் போதகம்பண்ணி முடித்த பின்பு சீமோனை நோக்கி: ஆழத்திலே தள்ளிக்கொண்டுபோய், மீன்பிடிக்கும்படி உங்கள் வலைகளைப் போடுங்கள் என்றார்.
5 அதற்குச் சீமோன்: ஐயரே, இராமுழுவதும் நாங்கள் பிரயாசப்பட்டும் ஒன்றும் அகப்படவில்லை; ஆகிலும் உம்முடைய வார்த்தையின்படியே வலையைப் போடுகிறேன் என்றான்.
6 அந்தப்படியே அவர்கள் செய்து, தங்கள் வலை கிழிந்துபோகத்தக்கதாக மிகுதியான மீன்களைப் பிடித்தார்கள்.
7 அப்பொழுது மற்றப் படவிலிருந்த கூட்டாளிகள் வந்து தங்களுக்கு உதவி செய்யும்படிக்குச் சைகைகாட்டினார்கள்; அவர்கள் வந்து, இரண்டு படவுகளும் அமிழத்தக்கதாக நிரப்பினார்கள்.
கிறித்துவில் வாழ்வு:
எங்கே எப்படி வாழ்வோம் என்று,
ஏங்கும் எங்கள் நண்பரே,
அங்கே அவர்கள் கேட்டபோது,
அடைந்தார் நன்மை, உண்மையே.
முங்கும் நிலையில் நானுமிருக்க,
முன்னால் வந்தவர் இயேசுவே.
மங்கா வாழ்வை எனக்கும் தந்து
மகிழச் செய்தார் நேசரே!
ஆமென்.