எப்படி மீட்படைவேன்?
நற்செய்தி மாலை: மாற்கு 10:26-27.
“சீடர்கள் மிகவும் வியப்பில் ஆழ்ந்தவர்களாய், ‘ பின் யார்தாம் மீட்புப்பெற முடியும்? ‘ என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள். இயேசு அவர்களைக் கூர்ந்து நோக்கி, ‘ மனிதரால் இது இயலாது. ஆனால் கடவுளுக்கு அப்படியல்ல, கடவுளால் எல்லாம் இயலும் ‘ என்றார். ”
நற்செய்தி மலர்:
இனிய மீட்பைப் பெற்றுக்கொள்ள,
இயலாதவன் நான் விழுகின்றேன்.
புனிதம் என்னில் சிறிதும் இல்லை;
புரிந்து நெஞ்சில் அழுகின்றேன்.
மனிதர் மீள மண்ணில் வந்த
மா அருளாளனைத் தொழுகின்றேன்.
எனினும் என்ற ஐயமேயில்லை;
இயேசு மீட்பார் எழுகின்றேன்.
ஆமென்.