எப்படிச் சொல்வேன் எந்தன் எண்ணம்?
நற்செய்தி மாலை: மாற்கு 13:34-37.
“நெடும்பயணம் செல்லவிருக்கும் ஒருவர் தம் வீட்டைவிட்டு வெளியேறும்போது தம் பணியாளர் ஒவ்வொருவரையும் அவரவர் பணிக்குப் பொறுப்பாளராக்கி, விழிப்பாயிருக்கும்படி வாயில் காவலருக்குக் கட்டளையிடுவார். அதுபோலவே நீங்களும் விழிப்பாயிருங்கள். ஏனெனில் வீட்டுத் தலைவர் மாலையிலோ, நள்ளிரவிலோ, சேவல் கூவும் வேளையிலோ, காலையிலோ எப்போது வருவார் என உங்களுக்குத் தெரியாது. அவர் திடீரென்று வந்து நீங்கள் தூங்குவதைக் காணக்கூடாது. நான் உங்களுக்குச் சொல்லுவதை எல்லாருக்குமே சொல்கிறேன்; விழிப்பாயிருங்கள்.”
நற்செய்தி மலர்:
இரவா, பகலா என்பதும் தெரியேன்;
எந்த நாளில் என்றும் அறியேன்.
என்றானாலும் வருவீர் திண்ணம்;
எப்படிச் சொல்வேன் எந்தன் எண்ணம்?
உறவாய்ப் பழகும் மக்கள் கூட்டம்,
உம்மை மறந்து போடுதே ஆட்டம்.
உணர்வு கொடுக்க உம்மால் முடியும்.
ஒருவரும் கெடாமல் மீட்கப் பிடியும்!
ஆமென்.
