எதை அறுப்பேன்?
நற்செய்தி மாலை: மாற்கு 9:43-46.
“உங்கள் கை உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதை வெட்டி விடுங்கள். நீங்கள் இரு கையுடையவராய் அணையாத நெருப்புள்ள நரகத்துக்குள் தள்ளப்படுவதைவிட, கை ஊனமுற்றவராய் நிலைவாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது. உங்கள் கால் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதை வெட்டி விடுங்கள். நீங்கள் இரு காலுடையவராய் நரகத்தில் தள்ளப்படுவதைவிட கால் ஊனமுற்றவராய் வாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது. உங்கள் கண் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால், அதைப் பிடுங்கி எறிந்து விடுங்கள்.”
நற்செய்தி மலர்:
எந்தக் கையால் தீங்கு செய்தேன்?
எந்தக் காலால் அங்கு சென்றேன்?
இந்தக் கண்களில் எதனால் பார்த்தேன்?
என்று கேட்டால் பதிலோ அறியேன்!
தந்த உறுப்புகள் யாவும் தீங்காய்,
தவறே செய்தால் எதை அறுப்பேன்?
சொந்த நேர்மையில்லை, வெறுத்தேன்;
சொல்லால் கழுவும், தூய்மை பெறுவேன்!
ஆமென்.