எதைத் துறந்தேன் இயேசுவிற்காக?
நற்செய்தி மாலை: மாற்கு 10:28-31.
“அப்போது பேதுரு அவரிடம், ‘பாரும், நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே’ என்று சொன்னார். அதற்கு இயேசு, ‘ உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தாயையோ, தந்தையையோ, பிள்ளைகளையோ, நிலபுலன்களையோ விட்டுவிட்ட எவரும் இம்மையில் நூறு மடங்காக வீடுகளையும் சகோதரர்களையும் சகோதரிகளையும் தாயையும் நிலபுலன்களையும், இவற்றோடு கூட இன்னல்களையும் மறுமையில் நிலைவாழ்வையும் பெறாமல் போகார். முதன்மையானோர் பலர் கடைசி ஆவர்; கடைசியானோர் முதன்மை ஆவர் ‘ என்றார்.”
நற்செய்தி மலர்:
எதைத் துறந்தேன் உமக்காய் என்று
இன்று நானும் பார்க்கையிலே,
எதுவும் இல்லை என்றறிந்து,
என்னில் நானே வருந்துகிறேன்.
விதை விழுந்து மறைந்தால்தானே,
விளைச்சலாகும் என்றறிந்து,
விட்டுவிட்டேன் தன்னலத்தை,
விண்ணரசே திருந்துகிறேன்!
ஆமென்.