எது புதுமை?
கிறித்துவின் வாக்கு: லூக்கா 5:36-39.
36 அவர்களுக்கு ஒரு உவமையையும் சொன்னார்: ஒருவனும் புதிய வஸ்திரத்துண்டைப் பழைய வஸ்திரத்தின்மேல் போட்டு இணைக்கமாட்டான், இணைத்தால் புதியது பழையதைக் கிழிக்கும்; புதியவஸ்திரத்துண்டு பழைய வஸ்திரத்துக்கு ஒவ்வாது.
37 ஒருவனும் புது திராட்சரசத்தைப் பழந்துருத்திகளில் வார்த்துவைக்கமாட்டான்; வார்த்துவைத்தால் புதுரசம் துருத்திகளைக் கிழித்துப்போடும், இரசமும் சிந்திப்போம், துருத்திகளும் கெட்டுப்போம்.
38 புது ரசத்தைப் புது துருத்திகளில் வார்த்துவைக்கவேண்டும், அப்பொழுது இரண்டும் பத்திரப்பட்டிருக்கும்.
39 அன்றியும் ஒருவனும் பழைய ரசத்தைக் குடித்தவுடனே புது ரசத்தை விரும்பமாட்டான், பழைய ரசமே நல்லதென்று சொல்லுவான் என்றார்.
கிறித்துவில் வாழ்வு:
ஒன்று இன்று வேறொன்றாகும்
உருமாற்றத்தைப் புதுமை என்பார்.
என்றுமெங்கும் இல்லா ஒன்றை
இறைவன் தந்தால் என்னென்பார்?
பன்றி புரளும் அழுக்காயிருந்தும்,
படைத்தவர் தூய்மை ஆக்குகிறார்.
இன்று இதுதான் புதுமை என்பேன்.
இழிஞரும் புனிதர் ஆகின்றார்.
ஆமென்.