எதிர்காலம் ஒரு புதிர்காலம்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 18:31-34.
31 பின்பு அவர் பன்னிருவரையும் தம்மிடத்தில் அழைத்து: இதோ, எருசலேமுக்குப் போகிறோம், மனுஷகுமாரனைக் குறித்துத் தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்டவைகளெல்லாம் நிறைவேறும்.
32 எப்படியெனில், அவர் புறஜாதியாரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டு, பரியாசமும் நிந்தையும் அடைந்து, துப்பப்படுவார்.
33 அவரை வாரினால் அடித்து, கொலை செய்வார்கள்; மூன்றாம் நாளிலே அவர் உயிரோடே எழுந்திருப்பார் என்றார்.
34 இவைகளில் ஒன்றையும் அவர்கள் உணரவில்லை; அவைகளின் பொருள் அவர்களுக்கு மறைவாயிருந்தது, அவர் சொன்னவைகளை அவர்கள் அறிந்துகொள்ளவில்லை.
கிறித்துவில் வாழ்வு:
எதிர் கொண்டழைக்கும் இறப்பின் பொழுதை,
யார்தான் முன்பே அறிந்திருப்பார்?
புதிர் என்றழைக்கும் இயேசுவின் சாவை,
புனிதர் அவரோ தெரிந்திருந்தார்.
கதிர் கண்டறியும் பயிரின் முதிர்வை;
கற்றவர் என நாம் காத்திருப்போம்.
அதுவரைவேண்டும் நம்மில் பொறுமை;
அவர்போல் அன்பில் பார்த்திருப்போம்!
ஆமென்.