ஊண் உடை அன்று!

ஊண் உடை அன்று!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 7:33-35.
33 எப்படியெனில், யோவான்ஸ்நானன் அப்பம் புசியாதவனும் திராட்சரசம் குடியாதவனுமாய் வந்தான்; அதற்கு நீங்கள்: அவன் பிசாசுபிடித்திருக்கிறவன் என்கிறீர்கள்.
34 மனுஷகுமாரன் போஜனபானம் பண்ணுகிறவராய் வந்தார்; அதற்கு நீங்கள்: இதோ, போஜனப்பிரியனும் மதுபானப்பிரியனுமான மனுஷன், ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் சிநேகிதன்என்கிறீர்கள்.
35 ஆனாலும் ஞானமானது அதன் பிள்ளைகளெல்லாராலும் நீதியுள்ளதென்று ஒப்புக்கொள்ளப்படும் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:
உண்டு மகிழ்ந்து  உரைப்பாருண்டு;
உண்ணா நிலையில் உரைப்பதுமுண்டு.
முண்டுமின்றி உழைப்பாருண்டு;
முதற்தர உடைகள் உடுப்பதுமுண்டு.
கொண்டுவருவார் ஊண் உடையன்று;
கொடுமை வெறுக்கும் அறிவே நன்று.
கண்டுகொண்ட பிள்ளைகள் இன்று,
கடவுளரசில் வாழ்வார் நன்று!
ஆமென்.

Leave a Reply