உயிர்த்தெழுந்தார், உயிர்த்தெழுவோம்!

உயிர்த்தெழுந்தார், உயிர்த்தெழுவோம்!
நற்செய்தி மாலை: மாற்கு 16:5-8.
“பிறகு அவர்கள் கல்லறைக்குள் சென்றபோது வெண்தொங்கல் ஆடை அணிந்த இளைஞர் ஒருவர் வலப்புறம் அமர்ந்திருக்கக் கண்டு திகிலுற்றார்கள். அவர் அவர்களிடம், ‘ திகிலுற வேண்டாம்; சிலுவையில் அறையப்பட்ட நாசரேத்து இயேசுவைத் தேடுகிறீர்கள்; அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்; அவர் இங்கே இல்லை; இதோ, அவரை வைத்த இடம். நீங்கள் புறப்பட்டுச் செல்லுங்கள், பேதுருவிடமும் மற்றச் சீடரிடமும், ‘ உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவுக்குப் போய்க் கொண்டிருக்கிறார்; அவர் உங்களுக்குச் சொன்னது போலவே அவரை அங்கே காண்பீர்கள் ‘ எனச் சொல்லுங்கள் ‘ என்றார். அவர்கள் கல்லறையைவிட்டு வெளியே வந்து ஓட்டம் பிடித்தார்கள்; நடுக்கமுற்று மெய் மறந்தவர்களாய் யாரிடமும் எதுவும் கூறவில்லை. ஏனெனில் அவர்கள் அச்சம் கொண்டிருந்தார்கள்.”
நற்செய்தி மலர்:
பிறந்தவர் எவரும் இறந்திடுவார்;
பிறவி முடிந்ததும் பறந்திடுவார்.
இறந்தவர் பின்னர் என்னாவார்?
இதற்கு விடையை யார் சொல்வார்?
திறந்து பார்ப்போம் இறைநூலை;
தெய்வ மைந்தன் உயிர்த்தெழுந்தார்.
உறக்கம் போன்றதே நம் இறப்பும்.
ஒருநாள் நமையும் எழுப்பிடுவார்!
ஆமென்.

No automatic alt text available.

Leave a Reply