உப்பே!

கரைந்து போகும் உப்பாய்…
நற்செய்தி மாலை: மாற்கு 9:49-50.
“ஏனெனில் பலிப்பொருள் உப்பால் தூய்மையாக்கப்படுவதுபோல் ஒவ்வொருவரும் நெருப்பால் தூய்மையாக்கப்படுவர். உப்பு நல்லது. ஆனால் அது உவர்ப்பற்றுப் போனால் எதைக்கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்குவீர்கள்? நீங்கள் உப்பின் தன்மை கொண்டிருங்கள். ஒருவரோடு ஒருவர் அமைதியுடன் வாழுங்கள்.
நற்செய்தி மலர்:
மறைந்து செல்லும் வேரே,
மரத்தை மண்ணில் நிறுத்தும்.
கரைந்து போகும் உப்பே,
கறியில் சுவையை இருத்தும்.
இரைந்து போடும் கூச்சல்,
எப்படி நிம்மதி கொடுக்கும்?
விரைந்து அறிவாய், அவையே,
விளம்பரப் பொய்கள் கெடுக்கும்!
ஆமென்.

Image may contain: food
LikeShow More Reactions

Comment

Leave a Reply