உணர்ச்சிப் பேச்சு!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 22:33.
33 அதற்கு அவன்: ஆண்டவரே, காவலிலும் சாவிலும் உம்மைப் பின்பற்றிவர, ஆயத்தமாயிருக்கிறேன் என்றான்.
கிறித்துவில் வாழ்வு:
உணர்ச்சிப் பெருக்கால் பொழிதல் வேறு;
உணர்த்தும் இறையால் மொழிதல் வேறு.
கணக்குப் பார்த்து உழைத்தல் வேறு;
கடவுளுக்காக இழத்தல் வேறு.
மணக்கும் கிறித்தவத் தாழ்மை வேறு;
மனிதர் விரும்பும் ஆளுமை வேறு.
இணைக்கும் இறையால் வேறு வேறு,
என்றறிந்தால் பேறு பேறு!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.