ஈராறு அகவை முடித்த இயேசு
இறைவாக்கு: லூக்கா 2:41-45.
41 அவருடைய தாய் தகப்பன்மார் வருஷந்தோறும் பஸ்கா பண்டிகையில் எருசலேமுக்குப் போவார்கள்.
42 அவருக்குப் பன்னிரண்டு வயதானபோது, அவர்கள் அந்தப் பண்டிகை முறைமையின்படி எருசலேமுக்குப் போய்,
43 பண்டிகைநாட்கள் முடிந்து, திரும்பிவருகிறபோது, பிள்ளையாகிய இயேசு எருசலேமிலே இருந்துவிட்டார்; இது அவருடைய தாயாருக்கும் யோசேப்புக்கும் தெரியாதிருந்தது.
44 அவர் பிரயாணக்காரரின் கூட்டத்திலே இருப்பாரென்று அவர்கள் நினைத்து, ஒருநாள் பிரயாணம் வந்து, உறவின் முறையாரிடத்திலும் அறிமுகமானவர்களிடத்திலும் அவரைத் தேடினார்கள்.
45 காணாததினாலே அவரைத் தேடிக்கொண்டே எருசலேமுக்குத் திரும்பிப் போனார்கள்.
இறைவாழ்வு:
ஈராறு அகவை முடித்துவிட்டால்,
யூதர் இளைஞர் ஆகிடுவார்.
சீராக வாழத் தமை ஈய,
செருசலேம் கோயில் ஏகிடுவார்.
வாராது வந்த இறைமகனும்,
வாழ்வைப் படைக்கச் செல்கின்றார்.
பாராது போகும் இளைஞர்களே,
பணிவோர் வாழ்வில் வெல்கின்றார்!
ஆமென்.