இழப்பு இல்லை!

இழப்பு இல்லை, இறையே!

கிறித்துவின் வாக்கு:18:28-30.

28  அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: இதோ, நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, உம்மைப் பின்பற்றினோமே என்றான்.

29  அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தினிமித்தம் வீட்டையாவது, பெற்றாரையாவது, சகோதரரையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது விட்டுவிட்ட எவனும்,

30  இம்மையிலே அதிகமானவைகளையும், மறுமையிலே நித்திய ஜீவனையும் அடையாமற்போவதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:

அளந்தளிக்கும் இறைமுன் சென்று,

அடியன் தந்தது என்பதுவும்,

இழந்துபோன இன்பம் என்று,

இன்னொரு கணக்கெழுதுவதும்,

வளர்ந்து நிற்கும் பலரிடம் இன்று,

வாடாதிருக்கும் குறையாகும்.

தளர்ந்து போகாதளிப்போம் நன்று.

தருவது யாவும் இறையாகும்!

ஆமென்.

Leave a Reply