இறையின் சாயல் அன்பே!
நற்செய்தி மாலை: மாற்கு 12:32-34.
“அதற்கு மறைநூல் அறிஞர் அவரிடம், ‘ நன்று போதகரே, ‘ கடவுள் ஒருவரே; அவரைத் தவிர வேறு ஒரு கடவுள் இல்லை ‘ என்று நீர் கூறியது உண்மையே. அவரிடம் முழு இதயத்தோடும் முழு அறிவோடும் முழு ஆற்றலோடும் அன்பு செலுத்துவதும், தன்னிடம் அன்புகொள்வது போல் அடுத்திருப்பவரிடம் அன்பு செலுத்தவதும் எரிபலிகளையும் வேறுபலிகளையும்விட மேலானது ‘ என்று கூறினார். அவர் அறிவுத்திறனோடு பதிலளித்ததைக் கண்ட இயேசு அவரிடம், ‘ நீர் இறையாட்சியினின்று தொலையில் இல்லை ‘என்றார். அதன்பின் எவரும் அவரிடம் எதையும் கேட்கத் துணியவில்லை.”
நற்செய்தி மலர்;
ஒன்றே ஓன்று தெய்வம் ஓன்று.
ஒன்றின்மேலே இல்லை என்று,
அன்றே சொன்னார், அதனை இன்று,
அறியும் அறிவே நமக்கு நன்று.
என்றே உரைக்கும் நம்மில் இன்று,
இறையின் சாயல் அன்பு என்று,
நன்றே சொன்னார் இயேசு அன்று,
நன்மை வழியில் நடந்து சென்று!
ஆமென்.
