இறையின் அன்பை எடுத்துரைப்போம்!
நற்செய்தி மாலை: மாற்கு 16:15-18.
” இயேசு அவர்களை நோக்கி, ‘ உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். நம்பிக்கைகொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்; நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர். நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அரும் அடையாளங்களைச் செய்வர்; அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்;பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர் ‘ என்று கூறினார்.”
நற்செய்தி மலர்:
எட்டுத் திக்கிலும் எல்லா இடத்திலும்,
இறையின் அன்பை எடுத்துரைப்போம்.
கெட்டுப் போனோர் மீட்கப்படுவார்;
கிறித்துவின் அருளைக் கொடுத்துரைப்போம்.
திட்டும் மனிதரும் தீமை விடுவார்;
தெய்வ ஆவியில் அடுத்துரைப்போம்.
விட்டுப் போகாதிருக்கும் தெய்வம்
விரும்பா வினையும் விடுத்துரைப்போம்!
ஆமென்.