இறையருளும் இனிமை!
நற்செய்தி 3:27.
27. யோவான் பிரதியுத்தரமாக: பரலோகத்திலிருந்து ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டாலொழிய, அவன் ஒன்றையும் பெற்றுக்கொள்ளமாட்டான்.
நல்வழி:
இறை அருளும் இனிமை போதும்;
இந்த அறிவை ஏற்க வாரும்.
குறை பொருளை நாடிப் போகும்,
குற்ற நெஞ்சை மீட்கத் தாரும்.
நிறை வாழ்வின் முழுமை காணும்;
நீவிர் தேடா இயேசு பாரும்.
பிறை வளரும் காட்சியாகும்,
பேரரசுள் வந்து சேரும்!
ஆமென்.
-செல்லையா.