இரக்கம் கொள்வோம்!

இரக்கம் கொள்வோம்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 1:53-55.

53 பசியுள்ளவர்களை நன்மைகளினால் நிரப்பி, ஐசுவரியமுள்ளவர்களை வெறுமையாய் அனுப்பிவிட்டார்.
54 நம்முடைய பிதாக்களுக்கு அவர் சொன்னபடியே, ஆபிரகாமுக்கும் அவன் சந்ததிக்கும் என்றென்றைக்கும் இரக்கஞ்செய்ய நினைத்து,
55 தம்முடைய தாசனாகிய இஸ்ரவேலை ஆதரித்தார் என்றாள்.

கிறித்துவில் வாழ்வு:
இரக்கம் இல்லாச் செல்வந்தர்,
இரக்கும் நிலைக்கு வருவாரே.
சரக்கு போன்ற கல் நெஞ்சர்,
சரிவர விளைச்சல் பெறுவாரே.
அரக்கத் தன்மை கொண்டவர்க்கு,
அழிவு உறுதி, அறிவீரே.
உரக்கச் சொல்லும் இவ்வுண்மை,
உணர்ந்தால் வாழ்வு பெறுவீரே!
ஆமென்.

Image may contain: one or more people and outdoor

Leave a Reply