இயேசுவின் உயிர்ப்பு!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 24:5-6.
கிறித்துவில் வாழ்வு:
இறந்தவர் கிடக்கிற கூட்டத்திலே,
எழுந்தவர் என்பவர் ஒருவரில்லை.
பிறந்தவர் முடிக்கிற தோட்டத்திலே,
பின்னர் நிகழ்வதும் தெரிவதில்லை.
சிறந்தவர் இயேசு எழுகையிலே,
சிதறின பழமை எண்ணங்களே.
திறந்தவர் அவரைத் தொழுகையிலே,
தெரியுது உயிர்ப்பின் வண்ணங்களே!
ஆமென்.