இயேசுவாகுவோம்!

இயேசுவாக மாறுவோம்!


உண்மை இறைவன் நமைப் படைத்தாரே;

உடல் பொருள் ஆவியில் அறிவடைத்தாரே.


அன்பாய் வாழும் வழி கொடுத்தாரே;

அறம் விட்டவரோ, பழி எடுத்தாரே.


மண்ணில் மகனாய், இறை பிறந்தாரே;


மன்னிப்பென்னும் அருள் திறந்தாரே.


என்னே அன்பென இதை நினைப்பாரே,

இயேசுவாக, இறை இணைப்பாரே!

ஆமென்.


கெர்சோம் செல்லையா.
24, செயலகக் குடியிருப்பு, இலட்சுமிபுரம்/இரட்டை ஏரி,சென்னை-600099.

Leave a Reply