ஆவியர் வழிநடத்தல்
இறைவாக்கு: லூக்கா 2:26-28.
26 கர்த்தருடைய கிறிஸ்துவை நீ காணுமுன்னே மரணமடையமாட்டாய் என்று பரிசுத்த ஆவியினாலே அவனுக்கு அறிவிக்கப்பட்டுமிருந்தது.
27 அவன் ஆவியின் ஏவுதலினால் தேவாலயத்திலே வந்திருந்தான். இயேசு என்னும் பிள்ளைக்காக நியாயப்பிரமாண முறைமையின்படி செய்வதற்குத் தாய் தகப்பன்மார் அவரை உள்ளே கொண்டு வருகையில்,
28 அவன் அவரைத் தன் கைகளில் ஏந்திக்கொண்டு, தேவனை ஸ்தோத்திரித்து:
கிறித்துவில் வாழ்வு:
நாளை நடப்பதை நாம் அறியோம்;
நடத்தும் ஆவியர் அறிகின்றார்.
வேளை வருமுன் பணிமுடிக்க,
வேண்டும் வலுவும் தருகின்றார்.
ஏழை என்னால் இயலாது,
என்று எங்கும் கூறாது,
தோழர் ஆவியர் துணை கேட்டு,
தொடர்வோருக்கு அருள்கின்றார்!
ஆமென்.