ஆணையுரிமை யார் தந்தார்?
நற்செய்தி மாலை: மாற்கு 11:27-28.
“அவர்கள் மீண்டும் எருசலேமுக்கு வந்தார்கள். இயேசு கோவிலில் நடந்து கொண்டிருந்தபோது தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள், மூப்பர்கள் ஆகியோர் அவரிடம் வந்து, ‘ எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்? இவற்றைச் செய்ய உமக்கு அதிகாரம் கொடுத்தவர் யார்? ‘ என்று கேட்டனர்.”
நற்செய்தி மலர்:
ஆணையுரிமை யார் தந்தாரென,
அறவழி அடைக்கும் அறிஞரே,
சாணை பிடிக்காக் கத்தி அதுவே;
சண்டையிடும் நீர் வறியரே.
கோணலை நேர்மை என்றேயுரைத்துக்
கொடுமை செய்யும் தலைவரே,
வீணராய் இப்படி நடப்பவர் முடிவில்,
வெம்பி நொந்து அலைவரே!
ஆமென்.