அருஞ்செயல்!

திரைக் கதை மிஞ்சும் அருஞ்செயல்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:30-32.
30 அன்றியும் மோசே எலியா என்னும் இரண்டுபேரும் மகிமையோடே காணப்பட்டு, அவருடனே சம்பாஷணைபண்ணி,
31 அவர் எருசலேமிலே நிறைவேற்றப்போகிற அவருடைய மரணத்தைக்குறித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள்.
32 பேதுருவும் அவனோடிருந்தவர்களும் நித்திரைமயக்கமாயிருந்தார்கள். ஆகிலும் அவர்கள் விழித்து அவருடைய மகிமையையும் அவரோடே நின்ற அவ்விரண்டுபேரையும் கண்டார்கள்.

கிறித்துவில் வாழ்வு:
அரைத்தூக்கத்தில் அமிழும்போதும்,
ஆண்டவரிடத்தில் அண்டிடுவோம்.
உரைப்பதர்க்கரிய உண்மைப் பொருளை,
உறங்கா அவரில் கண்டிடுவோம்.
இரைப்பை நிரப்புதல் போதும் என்ற,
இன்றைய ஊழியம் விட்டிடுவோம்.
திரைக்கதை மிஞ்சும் அருஞ்செயல் கண்டு 
தெய்வ அரசினைக் கட்டிடுவோம்!
ஆமென்.

Leave a Reply