அன்பே அழகு!
கண்முன் காணும் எழைக்கிரங்கு;
காணா இறையை இப்படி வணங்கு.
மண் உடம்பாயினும் கடவுளின் வடிவு;
மாற்றம் இல்லை; யாவரும் உறவு.
விண் எனும் பேறு உண்டென நம்பு;
வேண்டும் நம்முள் அவ்வருட் பண்பு.
புண் படுத்தாது பிறரிடம் பழகு;
புரியும் செயலில் அன்பே அழகு.
-கெர்சோம் செல்லையா.