அன்னாளைப் போல்….

அன்னாளைப் போல்….
இறைவாக்கு: லூக்கா2:36-38.
36 ஆசேருடைய கோத்திரத்தாளும், பானுவேலின் குமாரத்தியுமாகிய அன்னாள் என்னும் ஒரு தீர்க்கதரிசி இருந்தாள்; அவள் கன்னிப்பிராயத்தில் விவாகமானதுமுதல் ஏழுவருஷம் புருஷனுடனே வாழ்ந்தவளும், அதிக வயதுசென்றவளுமாயிருந்தாள்.
37 ஏறக்குறைய எண்பத்துநாலு வயதுள்ள அந்த விதவை தேவாலயத்தை விட்டு நீங்காமல், இரவும் பகலும் உபவாசித்து, ஜெபம்பண்ணி, ஆராதனை செய்து கொண்டிருந்தாள்.
38 அவளும் அந்நேரத்திலே வந்து நின்று, கர்த்தரைப் புகழ்ந்து, எருசலேமிலே மீட்புண்டாகக் காத்திருந்த யாவருக்கம் அவரைக்குறித்துப் பேசினாள்.

இறைவாழ்வு:
எண்பத்து நான்கு வயதானாலும்,
இறைப்பணி செய்தார் அன்னா.
கண் செத்து முடும் காலமளவும்,
கருத்தாய் உழைப்பேன் மன்னா.
பெண்ணை மதியா மக்கள் நடுவே,
பெரும்பணி செய்தவர் அன்னா.
உண்மை மட்டும் உரக்கக்கூறி,
உம் பணி செய்வேன் மன்னா!
ஆமென்.

Image may contain: one or more people
LikeShow More Reactions

Comment

Leave a Reply